Homeசெய்திகள்சினிமாப்ராஜெக்ட் கே யில் பிரபாஸுடன் மோதும் கமல்ஹாசன்...... உறுதி செய்த படக்குழு!

ப்ராஜெக்ட் கே யில் பிரபாஸுடன் மோதும் கமல்ஹாசன்…… உறுதி செய்த படக்குழு!

-

இந்திய திரை உலகில் அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் பான் இந்தியா படங்களில் ப்ராஜெக்ட் கே மிக முக்கியமான படமாக உள்ளது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி போன்றோர் நடிக்கின்றனர் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கு
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான மகாநதி (தமிழில்- நடிகையர் திலகம்) படத்தை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார்.
ப்ராஜெக்ட்-கே ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
நடிகர் பிரபாஸின் படங்கள் தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி வட இந்திய மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. மேலும் பிரபாஸ் இந்த படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் போன்ற நட்சத்திரங்களுடன் நடிப்பதன் மூலம் படத்திற்கான வரவேற்பும் மிக அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் தான் இன்று காலை படக்குழு மேலும் ஒரு புதிய அறிவிப்பை வீடியோ ஒன்றாக தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் வில்லன் ரோலில் நடிக்க உள்ளார் என ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் வெளிவந்தன.
இதை தற்போது உறுதிப்படுத்தும் வகையில் கமலஹாசன் இப்படத்தில் உள்ளார் என்பதை அதிகாரப்பூர்வமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தன்னுடைய யூடியூப் சேனல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் உலக நாயகன் கமலஹாசனை படப்பிடிப்பிற்கு வரவேற்பதாக வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.
ப்ராஜெக்ட்-கே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே மிக அதிகமாக இருந்து வந்த நிலையில் உலக நாயகன் இப்படத்தில் இணைந்திருப்பது மேலும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
தற்போது இந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

MUST READ