Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியின் மனைவி கூடுதல் மனுத்தாக்கல்!

செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதல் மனுத்தாக்கல்!

-

 

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!
File Photo

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரணை நடத்தப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆழ்மனக்காட்சியே வாழ்க்கையாகிறது – மாற்றம் முன்னேற்றம் – 7

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவுடன் கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தமது கணவருக்கு எதிராக மத்திய அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என்றும் கடந்த 2022- ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்பதால், செந்தில் பாலாஜிக்கு எதிராக அண்ணாமலை வெறுப்பை வளர்த்துள்ளார். கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், கைது உத்தரவில் இருந்து கணவரை விடுவிக்க வேண்டும். ஜூன் 13- ஆம் தேதி இரவு 11.00 மணிக்கு சோதனை நிறைவடைந்ததாக அமலாக்கத்துறைத் துறை குறிப்பிட்டிருக்கும் நிலையில், நள்ளிரவு 01.39 மணிக்கு தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

மனத்திற்குள் கோயிலை கட்டினார் நிஜத்தில் எழுந்தது – மாற்றம் முன்னேற்றம் – 8

இடைப்பட்ட மூன்று மணி நேரத்தில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை என்றும், செந்தில் பாலாஜியின் மனைவி தனது கூடுதல் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ