Homeசெய்திகள்இந்தியாசாலையில் போராடப் போவதில்லை என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவிப்பு!

சாலையில் போராடப் போவதில்லை என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவிப்பு!

-

 

சாலையில் போராடப் போவதில்லை என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவிப்பு!

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்- க்கு எதிரான போராட்டத்தை இனி சாலையில் நடத்தப் போவதில்லை என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதல் மனுத்தாக்கல்!

பாலியல் குற்றச்சாட்டின் பேரில், மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்- க்கு எதிராக மீண்டும் சாலையில் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று முன்தினம் தான் அறிவித்திருந்தனர்.

திடீர் திருப்பமாக, இனி தங்களது போராட்டம் நீதிமன்றத்தில் தான், சாலையில் அல்ல என்று நேற்று (ஜூன் 25) இரவு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள தினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மத்திய அரசு உறுதியளித்தப் படி, குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

எனவே, இனி சாலையில் இறங்கிப் போராடுவதை கைவிட்டு, நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் கூறியுள்ளனர். இதைப் பதிவிட்ட சில நிமிடங்களில், தினேஷ் போகத், சாக்ஷி மாலிக் இருவரும் சமூக வலைத்தளங்களில் சில நாட்கள் இடைவேளை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அரசுப் பேருந்து மீது கார் மோதி பயங்கர விபத்து- ஐந்து பேர் உயிரிழப்பு!

பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான வழக்கு டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ