கார்த்தி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ‘ஜப்பான்‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்குகிறார். இதில் கார்த்தி உடன் இணைந்து அனு இமானுவேல், விஜய் மில்டன், சுனில் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.
ஹெயிஸ்ட் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
சமீபத்தில் இதன் முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
மேலும் இந்த படம் 200 குடில்கள் கொண்ட பிரம்மாண்டமான கிராமம் செட் அமைத்து உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் கார்த்தி, தனது படப்பிடிப்பு காட்சிகளை நிறைவு செய்துள்ளதாகவும், அத்துடன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாகவும் சமீபத்தில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக இருப்பதால் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.