Homeசெய்திகள்சினிமாகிரைம் திரில்லராக உருவாகும் விஜய் ஆண்டனியின் 'கொலை'........படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!

கிரைம் திரில்லராக உருவாகும் விஜய் ஆண்டனியின் ‘கொலை’……..படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!

-

- Advertisement -

விஜய் ஆண்டனி, கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் தானே இயக்கி நடித்து இருந்தார்.
தங்கை சென்டிமென்ட் கதையில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியானது. குறிப்பாக தெலுங்கில் பிச்சைஃகாடு என்ற பெயரில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது.
இதற்கிடையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பல படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
அந்த வகையில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘கொலை ‘ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வெஞ்சர்ஸ், டேபிள் ப்ராபிட், லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன. க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் இதற்கு இசையமைத்துள்ளார்.
கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், அர்ஜுன் சிதம்பரம், முரளி ஷர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் இதன் ட்ரெய்லர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் ‘கொலை’ குறித்த முக்கிய அறிவிப்பு வருகின்ற ஜூன் 28ஆம் தேதி காலை 10.05 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

MUST READ