- Advertisement -
![விலை வீழ்ச்சி: கொய்யாப் பழங்களைக் குப்பையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/gova-1.jpg)
விலை வீழ்ச்சி காரணமாக, கொய்யாப் பழங்களைக் குப்பையில் கொட்டினர் விவசாயிகள்.
கிரைம் திரில்லராக உருவாகும் விஜய் ஆண்டனியின் ‘கொலை’……..படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!
திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் லக்னோ 49, பனாரஸ் ரக கொய்யாப் பழ சாகுபடி நடைபெறுகிறது. இந்த நிலையில், சீசன் காரணமாகவும், கொய்யாப் பழங்களின் விளைச்சல் அதிகரித்ததன் காரணமாகவும், அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஹ்ரித்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்!
22 கிலோ கொய்யாப்பழங்கள் அடங்கிய பெட்டி, வழக்கமாக ரூபாய் 1,200 வரை விற்பனையாகும் நிலையில், தற்போது 400 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. இதனால் கவலையடைந்த விவசாயிகள், கொய்யாப் பழங்களை குப்பையில் கொட்டிச் சென்றனர்.