![பாகிஸ்தான் வான் பரப்புக்குள் சென்ற இண்டிகோ விமானம்!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/INDIGO4343-1-2.jpg)
ஜம்முவில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, பயணிகள் விமானம் பாகிஸ்தான் வான்பரப்புக்குள் நுழைந்தது தெரிய வந்துள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ப்ராஜெக்ட் கே’..…. லேட்டஸ்ட் அப்டேட்!
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முக்கு பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines) நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்றது. ஆனால் ஜம்முவில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, விமானத்தைத் தரையிறக்க முடியவில்லை. இதனால் வானிலேயே நீண்ட நேரம் வட்டமடித்த விமானம், பாகிஸ்தான் வான் பரப்புக்குள் சென்றது.
கிரைம் திரில்லராக உருவாகும் விஜய் ஆண்டனியின் ‘கொலை’……..படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!
இது குறித்து ஜம்மு விமான நிலையத்தின் அதிகாரிகள் பாகிஸ்தான் அரசு உயரதிகாரிகளைத் தொடர்புக் கொண்டு நிலைமையை எடுத்துக் கூறினர். பின்னர், மீண்டும் இந்திய வான் பரப்புக்குள் நுழைந்த விமானம், அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது.