- Advertisement -
2024 மக்களவை தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்க முடிவு- கே.எஸ்.அழகிரி
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்தார்.
அதன்பின் டெல்லி அகில இந்திய காங். தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “பதவி கேட்டு காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தது கிடையாது. பதவி கிடைத்த பின்னர், பதவியை தக்க வைக்க தலைவர்களை சந்திப்பது கிடையாது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நீடித்தாலும் மகிழ்ச்சி, வேறு ஒருவரை நியமித்தாலும் மகிழ்ச்சி. எனக்கு ஒரு பணி வழங்கப்பட்டால் அதை மகிழ்வுடன் செய்வேன். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து விவாதிக்கவில்லை
2024 மக்களவை தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளோம். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக வேறு ஒருவரை நியமிதால் அதனை முழு மனதோடு ஏற்று கொள்வேன்” என்றார்.