Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின் கூட்டணியில் மாவீரன்.... சென்னையில் நடைபெறும் ப்ரீ ரிலீஸ் விழா!

சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின் கூட்டணியில் மாவீரன்…. சென்னையில் நடைபெறும் ப்ரீ ரிலீஸ் விழா!

-

நடிகர் சிவகார்த்திகேயன் தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் இவர் ‘மாவீரன்‘ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் இணைந்து அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை மண்டேலா படத்தின் இயக்குனரான மதன் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்த படம் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் பரத் சங்கர் இசையிலும் உருவாகியுள்ளது.
இப்படம் மாவீரன் என்ற பெயரில் தமிழிலும் மாவீருடு என்ற பெயரில் தெலுங்கிலும் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
மேலும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பிரீ ரிலீஸ் வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் வருகின்ற ஜூலை இரண்டாம் தேதி நடக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.அத்துடன் மேக்கிங் வீடியோவுடன் இணைந்த பிரீ ரிலீஸ் குறித்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

MUST READ