போலி பாஸ்போர்ட் முறைகேடு- டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை?
2019 ஆம் ஆண்டு மதுரை காவல் ஆணையராக இருந்தபோது நடந்த போலி பாஸ்போர்ட் முறைகேடு குறித்து ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது புகார் எழுந்தது.
தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அதில், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டு காவல் தலைமையக ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மதுரை ஆணையராக இருந்தபோது நடந்த போலி பாஸ்போர்ட் முறைகேடு குறித்து ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது புகார் எழுந்துள்ளது. பத்திரிக்கையாளர் வாராகி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் டேவிட்சன் தேவாசீர்வாதம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்தபோடு டேவிட்சன் தேவாசீர்வாதம், போலி பாஸ்போர்ட்டுகளை பலருக்கு வழங்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவருக்கு உடந்தையாக இருந்த உதவி காவல் ஆய்வாளர் சிவக்குமார் மீதும் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.