லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘ஆர் யூ ஓகே பேபி‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு நடிகை மட்டுமல்லாமல் சிறந்த இயக்குனரும் ஆவார்.
அந்த வகையில் இவர் அரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது 5வது படத்தை ‘ஆர் யூ ஓகே பேபி’ என்ற தலைப்பில் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சமுத்திரகனி, அபிராமி, மிஸ்கின், ஆடுகளம் நரேன், வினோதினி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வித்தியாசமான படைப்புகளை கொடுத்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஆர் யூ ஓகே பேபி’ திரைப்படம் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது தயாரிக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.