Homeசெய்திகள்சினிமாசஸ்பென்ஸ் திரில்லரில் ஹரிஷ் கல்யாண்..... வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சஸ்பென்ஸ் திரில்லரில் ஹரிஷ் கல்யாண்….. வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

-

- Advertisement -

நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது தோனி என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் “எல் ஜி எம்” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாணின் அம்மாவாக நடிகை நதியாவும் ,ஜோடியாக இவனாவும் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைய உள்ளது.
அதே சமயம் ஹரிஷ் கல்யாண் ‘பார்க்கிங்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராம்குமார் பாலகிருஷ்ணன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.படத்திற்கு ஜுஜூ சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி எஸ் இசையமைக்கிறார். சோல்ஜர் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். மேலும் எம் எஸ் பாஸ்கர், பிரார்த்தனா நாதன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்புகள் விரைவில் நிறைவடைய இருக்கும் சூழலில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

வழக்கமாக ஃபீல் குட் மற்றும் சாக்லேட் பாய் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், பார்க்கிங் பட போஸ்டரில் முகத்தில் காயங்களுடன் ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறார். மேலும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ