Homeசெய்திகள்இந்தியாபுதிய நாடாளுமன்ற வளாகத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர்?

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர்?

-

- Advertisement -

 

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர்?
File Photo

மழைக்காலக் கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவைச் செயலகத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். எஞ்சியுள்ள பணிகளை முடித்து புதிய நாடாளுமன்ற வளாகத்தில், மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்த ஏற்பாடுகளைச் செய்யும் படி அவர் கூறியுள்ளார்.

“சந்திராயன்- 3 விண்கலம் ஜூலை 13- ல் விண்ணில் ஏவப்படும்”- இஸ்ரோ அறிவிப்பு!

வரும் ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம் வரை மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மே மாதம் 28- ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மழைக்காலக் கூட்டத்தொடரில், பல்வேறு சட்டத்திருத்த மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசுத் திட்டமிட்டுள்ள நிலையில், மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு உள்ளிட்டப் பிரச்சனைகளை எழுப்ப காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டக் கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே இழுபறி?- வெளியானது கருத்துக் கணிப்பு முடிவுகள்!

இந்த நிலையில், மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசின் சார்பில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுக்கவுள்ளார். கூட்டத்தில், மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்தும், ஆக்கப்பூர்வமாக நடத்துவதும் குறித்தும் ஆலோசிக்கவுள்ளார்.

MUST READ