Homeசெய்திகள்தமிழ்நாடுசளி சிகிச்சைக்காக வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்டதால் பரபரப்பு

சளி சிகிச்சைக்காக வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்டதால் பரபரப்பு

-

சளி சிகிச்சைக்காக வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்டதால் பரபரப்பு

கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்காக வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கருணாகரன். இவர் கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், எனது மூத்த மகள் சாதனாவுக்கு உடல்நிலை சரியில்லை என சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். சளி பிரச்சனை இருப்பதாக மருத்துவர்களிடம் கூறினேன், உடனே எனது 13 வயது மளுக்கு மருத்துவர் ஊசி மற்றும் மாத்திரை எழுதி கொடுத்தார். அந்த சீட்டை பெற்றுகொண்டு செவிலியரிடம் சென்று கொடுத்தேன். ஆனால் செவிலியர், என்னிடம் சீட்டை வாங்கிக்கூட பார்க்காமல் எனது மகளுக்கு இரண்டு ஊசி போட்டார்.

நெஞ்சம் பதைபதைக்கிறது.. கடலூர் அரசு மருத்துவமனை வீடியோவை பார்த்து எடப்பாடி  பழனிசாமி அதிர்ச்சி | Edappadi Palanisamy worried after seen the  heartbreaking video of ...

அப்போது நான் செவிலியரிடம் எதற்காக 2 ஊசி போடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் நாய் கடித்தால் 2 ஊசி தான் போட வேண்டுமென கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், எனது மகளுக்கு நாய் கடிக்கவில்லை, சளி பிரச்சனைதான் என்றேன். அதற்கு செவிலியர் மலுப்பலாக பதிலளித்தார். ஊசி போட்ட உடனே எனது மகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே சிறுமியை உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் பிரிவில் சேர்த்தேன்.எனவே மகளுக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்த செவிலியர் பணியிலிருந்த மருத்துவ கண்காணிப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடலூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் செயலால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

MUST READ