நெல்லை- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் மற்றும் வேளாங்கண்ணி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் சேவையை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பக்ரீத் பண்டிகை..ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு..
அதன்படி, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல், ஜூலை 9, 16, 23, 30 மற்றும் ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் அறிவிப்பால், நெல்லை, மேட்டுப்பாளையம், வேளாங்கண்ணி, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.