
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தக்காளியின் விலை உயர்ந்திருப்பதால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
பக்ரீத் பண்டிகை..ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு..
தமிழகத்தில் தக்காளி விளைச்சல் பாதிப்பு, வெளிமாநிலங்களில் வரத்துக் குறைவுப் போன்ற காரணங்களால், தக்காளி விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில், ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், காய்கறிச் சந்தைக்கு மூன்று லாரிகளில் 50 டன் அளவுக்கே, தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்கின்றனர். தக்காளி வரத்துக் குறைந்ததால் சில்லறை விற்பனையில், 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.