
இன்று (ஜூன் 29) காலை 11.00 மணிக்கு சென்னையில் உள்ள பெரியார் திடலில் திராவிட இயக்க எழுத்தாளர் சூர்யா சேவியரின் மகள் டாக்டர் சே.சுஜி மற்றும் டாக்டர் சி.அஜித்குமார் ஆகியோரது திருமணத்தை தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். அத்துடன், மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள முதலமைச்சர், அவர்களுக்கு பசுமைக் கூடைகளை வழங்கினார்.
பக்ரீத் பண்டிகை..ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு..
இந்த திருமண விழாவில், தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள், திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன், திரைப்பட நடிகர் சத்யராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.