
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று (ஜூன் 29) இரவு உத்தரவிட்டிருந்தார். இதற்கான காரணம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
மூன்று வயது சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் வசம் இருந்த துறைகளை வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்குமாறு தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைச் செய்தது.
செந்தில் பாலாஜி வகித்த துறைகளை வேறு இரண்டு அமைச்சர்களுக்கு ஒதுக்குவதற்கு ஒப்புதலை அளித்த ஆளுநர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராகத் தொடர அனுமதிக்க முடியாது என்று கடிதம் அனுப்பினார். ஆளுநரின் கருத்தை ஏற்க மறுத்து செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கித் தருவதாக மோசடி மற்றும் பணமோசடி உள்பட பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு கூட்டணியின் ‘மாமன்னன்’ திரை விமர்சனம்!
அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி விசாரணையில் குறுக்கிட்டு செந்தில் பாலாஜி சட்ட நடவடிக்கைகளைத் தடுத்துள்ளார். அமலாக்கத்துறையின் வழக்கை எதிர்க்கொண்டு உள்ள செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் இருப்பதையும், அத்துடன் அவர் மீதுள்ள சில வழக்குகளை மாநில காவல்துறை விசாரிப்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்தால் பாரபட்சமற்ற விசாரணை நடைபெறாது எனவும், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாட்டில் தடை ஏற்படும்” எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.