
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருக்கும் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., இன்றுடன் (ஜூன் 30) ஓய்வுப் பெறுகிறார். கடந்த 2021- ஆம் ஆண்டு தி.மு.க. அரசால் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின் இன்று ஓய்வுப் பெறுகிறார்.
“ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; சட்ட ரீதியாகச் சந்திப்போம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
கடந்த 1963- ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பிறந்த முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., 30 ஆண்டுகளாக அரசின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குநராக 2019- ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றியுள்ளார்.
அதேபோல், நாகை மாவட்ட உதவி ஆட்சியராகவும், கடலூர் மாவட்டக் கூடுதல் ஆட்சியராகவும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும் பதவி வகித்துள்ளார். பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையில் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., முதன்மைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். வாய்க்கால் மீன்கள், நரிப்பல் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி தமிழக ஆளுநர் உத்தரவு!
தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.