Homeசெய்திகள்தமிழ்நாடுசிவ்தாஸ் மீனா பதவியேற்பில் நெகிழ்ச்சியான நிகழ்வு!

சிவ்தாஸ் மீனா பதவியேற்பில் நெகிழ்ச்சியான நிகழ்வு!

-

 

சிவ்தாஸ் மீனா பதவியேற்பில் நெகிழ்ச்சியான நிகழ்வு!
File Photo

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்கும் போது, நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

49ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்!

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., பதவியேற்பு ஆவணத்தில் கையெழுத்திட தனது பேனாவை எடுக்க முயன்ற போது, அவரைத் தடுத்த முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தான் பயன்படுத்தி வந்த பேனாவை வழங்கினார்.

ஜூலை 2இல் வெளியாகிறதா ஜெய்லரின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்? ….. காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

அந்த பேனாவைப் புன்னகையுடன் பெற்று ஆவணத்தில் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. கையெழுத்திட்டார். இதன் பின் சிவ்தாஸ் மீனாவுக்கு வாழ்த்துக் கூறிய முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., உங்களைத் தலைமைச் செயலாளர் பதவியில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும், நன்றாகப் பணியாற்றுங்கள், உங்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறேன் என்றும் வாழ்த்தி விடைபெற்றார்.

MUST READ