தமிழகத்தில் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டணம் இன்று (ஜூலை 01) முதல் அமலுக்கு வந்தது. வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மின்கட்டணம் உயர்ந்துள்ளது.
சிவ்தாஸ் மீனா பதவியேற்பில் நெகிழ்ச்சியான நிகழ்வு!
தமிழகத்தில் வீட்டு இணைப்புகளுக்கு எந்த வித மின் கட்டண உயர்வும் இல்லை. வீடுகள், வேளாண், குடிசை இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும். கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
49ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்!
வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு காரணமாக, வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக உயர வாய்ப்பிருப்பதாக தகவல் கூறுகின்றன.