Homeசெய்திகள்இந்தியாசிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு!

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு!

-

- Advertisement -

 

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு!
File Photo

அஞ்சலகங்களில் குறிப்பிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமல்!

ஐந்து ஆண்டு முதலீட்டு காலம் கொண்ட ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி 0.3% அதிகரிக்கப்பட்டு 6.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அஞ்சலங்களில் செய்யப்படும் ஓராண்டு, ஈராண்டு பிக்ஸ்டு டெபாசிட்களுக்கு வட்டி 0.1% அதிகரிக்கப்பட்டு, 7% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் மாதங்கள் வரையிலான காலாண்டுக்கு புதிய வட்டி விகிதங்கள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கு வட்டி 8% ஆகவும், பிபிஎஃப் சேமிப்பிற்கு வட்டி 7.1% ஆகவும், மூத்த குடிமக்களுக்கான சிறுசேமிப்புத் திட்டத்திற்கு வட்டி 8.2% ஆகவும், கிசான் விகாஸ் பத்திரத்திற்கு வட்டி 7.5% ஆகவும் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.

பேருந்து தீப்பிடித்த விபத்தில் 25 பயணிகள் உடல் கருகி உயிரிழப்பு!

இதேபோல், மற்ற சிறுசேமிப்புத் திட்டங்களுக்கும் பழைய வட்டியே தொடரும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

MUST READ