திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் திருமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்த பாடில்லை. ஆந்திரா மட்டுமின்றி, தெலுங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடக மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் வந்து ஏழுமலையான நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசித்து செல்கின்றனர்.
வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் இருக்கும் அனைத்து அறைகளும் நிரம்பி உள்ளதால் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 24 மணி நேரமாக ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது. ஒரே நாளில் 62 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், மூன்று கோடியை 75 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.