
பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கதாநாயகனாக நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம், கடந்த ஜூன் 29- ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அமெரிக்காவில் அவமதிக்கப்படும் மோடி!
‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நடிகர் வடிவேலு, நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், ‘மாமன்னன்’ திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் மாரி செல்வராஜுக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘மினி கூப்பர்’ காரைப் பரிசாக வழங்கினார்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும், களத்துடனும் தொடர்புப்படுத்திக் கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி.
உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!
‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் இயக்குநர் மாரி செல்வராஜ் சாருக்கு ‘மினி கூப்பர்’ கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மாமன்னன் கதை எந்த புள்ளியில் தொடங்கியதோ சரியாக அந்த புள்ளியில் நின்று ஒட்டுமொத்த மானுட சமூகத்தின் கரம் பற்றி பெரும் நெகிழ்ச்சியோடும் சொல்கிறேன் அத்தனைக்கும் நன்றியும், ப்ரியமும் உதயநிதி ஸ்டாலின் சார்” என்று குறிப்பிட்டுள்ளார்.