Homeசெய்திகள்சினிமாஇந்தமுறை சட்டை கிழியாது… கமல் மீதான அன்பை மாறி மாறி வெளிப்படுத்திய லோகேஷ் கனகராஜ், கௌதம்...

இந்தமுறை சட்டை கிழியாது… கமல் மீதான அன்பை மாறி மாறி வெளிப்படுத்திய லோகேஷ் கனகராஜ், கௌதம் மேனன்!

-

- Advertisement -

இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் கௌதம் மேனன் இருவரும் மாறி மாறி புகழ்ந்து கொண்ட ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல் ரசிகர்கள் என்று வந்தால் நான் தான் அதில் முதலிடம் பெறுவேன் சண்டையில் என் சட்டை கிழிந்தாலும் சரி நான் தான் முதல் ஆளாக அவரது தீவிர விசிறி என்று லோகேஷ் கனகராஜ் ஒரு விழா மேடையில் சொல்லியிருப்பார்.

இன்னும் எத்தனை லோகேஷ் கனகராஜ் வந்தாலும் கமலுக்கு நான்தான் தீவிர ரசிகன் என்று கௌதம் மேனனும் போட்டியில் இருக்கிறார். இவ்வாறு நம் ஆண்டவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுவே.
கௌதம் மேனன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் Fanboy சம்பவம் என்ற பெயரில் தரமான இரு படங்களை கொடுத்துள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு திரைப்படம் இன்று வரை தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த Fan Boy சம்பவமாக இருந்து வருகிறது. அந்த படம் தற்போது புது பணியுடன் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
தற்போதும் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான தியேட்டர்களில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆகி வருகின்றது. இந்நிலையில் இதை பகிர்ந்து இருந்த ரசிகர் எனக்கென்னமோ யார் ஆண்டவரின் Best Fan Boy Director என்ற சண்டையில் முதலிடத்தை பிடித்தது GVM சார்தான் என்று தோன்றுகிறது. Sorry to say this லோகி Lokesh ப்ரோ….” என்று சொல்லியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த லோகேஷ், Doubt ey venam bro GVM sir is வேற மாறி என்று தெரிவித்தார்.
அதற்கு மீண்டும் பதில் அளித்த கௌதம் மேனன் அது விக்ரம் படம் வரும் வரை தான். விக்ரம் படம் அதை முறியடித்து விட்டது..
தற்போது அதை முறியடிக்க நான் மேலும் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். ஆனால் இந்த முறை சட்டை கிழியாது. அன்பு மட்டுமே இருக்கும். என்று தெரிவித்திருந்தார்.

வேட்டையாடு விளையாடு மீண்டும் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று லோகேஷ் தெரிவித்துள்ளார். இவ்வாறு கமலின் தீவிர ரசிகர்களான இயக்குனர்கள் மாறி மாறி புகழ்ந்து வருவது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ