Homeசெய்திகள்தமிழ்நாடுமளிகை பொருட்களின் விலை அதிகரிப்பு..மக்கள் அதிர்ச்சி...

மளிகை பொருட்களின் விலை அதிகரிப்பு..மக்கள் அதிர்ச்சி…

-

- Advertisement -

சென்னையில் அரிசி மற்றும் மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் அதிகரித்து உள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆந்திரா ,கேரளா,மகாராஷ்டிரா,உள்ளிட்ட மாநிலங்களில் உணவு தானியங்களின் விளைச்சல் குறைந்துள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் மளிகைப் பொருட்களின் வரத்து குறைந்துள்ளது.ஆதலால் மளிகைப் பொருட்களின் விலை எதிர்ப்பார்க்காத அளவில் உயர்ந்துள்ளது.

கோயம்பேடு உணவு தானியங்கள் மொத்த விற்பனை வளாகத்தில் அரிசி,பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொரிட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

சீரகத்தின் விலை வரலாறு காணாத அளவு ஒரு கிலோ சீரகம் 365 ரூபாயிலிருந்து 540 ரூபாயாக அதிகரித்துள்ளது.துவரம் பருப்பின் விலை கிலோவுக்கு  ரூ.40 அதிகரித்துள்ளது.மேலும் 25 கிலோ எடையுள்ள அரிசி சிப்பத்தின் விலை கடந்த 6 மாதத்திற்கு முன் ரூ.900 விற்கப்பட்ட அரிசி சிப்பம் தற்போது ரூ.1050 என அதிகரித்துள்ளது.

பாசிப் பருப்பின் விலை ரூ,20 முதல் ரூ.40 வரை அதிகரித்துள்ளது.மிளகின் விலையும் ரூ.50 வரை அதிகரித்துள்ளது.மேலும் பாமாயிலின் விலைரூ.135லிருந்து  சற்று குறைந்து ரூ.85-க்கு விற்கப்படுகிறது.

மளிகைப் பொருட்களின் விலை உயர்வுப் பட்டியல்;

மளிகைப் பொருட்கள் முந்தையவிலை – தற்போதைய விலை

துவரம் பருப்பு ரூ.118  – ரூ.160

பாசி பருப்பு   ரூ.135 -ரூ.150

சீரகம்   ரூ.365- ரூ.540

மிளகு  ரூ.450 – ரூ.508

பாமாயில் ரூ.130 – ரூ.85

சாதாபொன்னி(25கிலோ)அரிசி ரூ.900 – ரூ.1050

மீடியம் பொன்னி(25கிலோ)அரிசி ரூ.1250 – ரூ.1500

பச்சரிசி(25கிலோ) ரூ.1400  – ரூ.1500

இவ்வாறு மளிகைப் பொருட்களின் உயர்வால் அன்றாடம் வேலை செய்யும் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் காய்கறியின் விலையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ