தமிழகத்தில் நடைமுறையில் உள்ள திரையரங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். அதில், ஏ.சி. வசதிக் கொண்ட மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் வசூலிக்கப்படும் 150 ரூபாய் கட்டணத்தில் இருந்து 250 ரூபாய் ஆகவும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் உள்ள ஏ.சி. வசதிக் கொண்ட திரையரங்குகளில் 100 ரூபாயில் இருந்து 200 ரூபாய் ஆகவும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் ஏ.சி. இல்லாத திரையரங்குகளில் 80 ரூபாயில் இருந்து 120 ரூபாய் ஆகவும் வசூலிக்க அனுமதி வழங்கிட வலியுறுத்தியுள்ளனர்.
31,008 பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!
IMAX திரையரங்குகளில் 450 ரூபாயும், EPIC தொழில்நுட்பம் கொண்ட திரையரங்குகளில் 400 ரூபாயும் RECLINER SEAT கொண்ட திரையரங்குகளில் 350 ரூபாயும் கட்டணமாக உயர்த்த திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.