“நான் பேசுனது தப்புதான்” வருத்தம் தெரிவித்த அமைச்சர்
உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைந்தது கலைஞர் போட்ட பிச்சை என்று பேசியதற்கு அமைச்சர் எ.வ. வேலு வருத்தம் தெரிவித்துள்ளார்.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மதுரை கலைஞர் நூலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “உயர்நீதிமன்ற கிளை கலைஞர் கொடுத்த கொடை என்பதற்கு பதிலாக பிச்சை என தவறான வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். கலைஞர் போட்ட பிச்சை என பேசியதால் தற்போது மன உளைச்சலில் உள்ளேன். கலைஞரை பெருமைப்படுத்தும் வகையில் பேசியபோது தவறான வார்த்தை வந்துவிட்டது. கலைஞர் போட்ட பிச்சை என பேசிய வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.
பொதுக்கூட்டத்தில் இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தியது இன்று காலையில் தான் தெரியவந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய தவறான வார்த்தைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன. நீதிமன்றங்கள் மீதும் நீதித்துறை மீதும் பெரும் மதிப்பு வைத்துள்ளேன். முதலமைச்சருடன் ஒப்பிட்டால் எடப்பாடி பழனிசாமி 50% கூட அனுபவம் இல்லாதவர்” என்றார்.