Homeசெய்திகள்சினிமாபிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்..... எந்த படத்தில் தெரியுமா?

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்….. எந்த படத்தில் தெரியுமா?

-

பிரதீப் ரங்கநாதன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன் பிறகு லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் இந்திய அளவில் இவருக்கு பேரையும் புகழையும் பெற்று தந்தது.

இதை தொடர்ந்து சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் , விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏறத்தாழ உறுதி செய்யப்பட்ட இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ஜான்விகபூர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது சம்பந்தமாக ஜான்வி கபூருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

ஜான்வி கபூர் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளாவார். இவர் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ