Homeசெய்திகள்சினிமாஅருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் திரில்லர்...... 'டிமான்ட்டி காலனி 2' லேட்டஸ்ட் அப்டேட்!

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் திரில்லர்…… ‘டிமான்ட்டி காலனி 2’ லேட்டஸ்ட் அப்டேட்!

-

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிமான்ட்டி காலனி திரைப்படம் வெளியானது. இதில் அருள் நிதியுடன் இணைந்து ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் ஜோசப் எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து எழுதி இயக்கியிருந்தார். மோகனா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் மு க தமிழரசு தயாரித்திருந்தா இப்படத்திற்கு ஏசு சின்னா இசை அமைத்திருந்தார்.

இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதன் வெற்றிக்குப் பிறகு தற்போது 7 ஆண்டுகள் கழித்து டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து இயக்க அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார். அருள் நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் வி ஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், அருண் பாண்டியன், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட்நைட் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

டிமான்ட்டி காலனி 2 THE VENGEANCE OF UNHOLY திரைப்படமானது ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள புனிதமற்ற ஆத்மாக்களின் பழிவாங்கும் கதை ஆகும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர்.தற்போது இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் THE JOURNEY TO DARKNESS என்ற மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த மேக்கிங் வீடியோவின் மூலம் இந்தப் படத்தில் சில வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது தெரிகிறது.இந்த வீடியோவில் இந்த வருடம் இருள் ஆளப்போகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு திகிலான பின்னணி இசையுடன் வெளியிடப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

MUST READ