Homeசெய்திகள்விளையாட்டுஆசிய விளையாட்டு- இந்திய அணி பங்கேற்கும் என அறிவிப்பு!

ஆசிய விளையாட்டு- இந்திய அணி பங்கேற்கும் என அறிவிப்பு!

-

 

ஆசிய விளையாட்டு- இந்திய அணி பங்கேற்கும் என அறிவிப்பு!
Photo: BCCI

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அலுவலகத்தில் 19வது அபெக்ஸ் கவுன்சில் கூட்டம் (Apex Council Meeting) நேற்று (ஜூலை 07) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல் – எடுபடுமா?

கூட்டத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நடப்பாண்டில் செப்டம்பர் மாதம், சீனா நாட்டின் ஹாங்சோ (Hangzhou) நகரத்தில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும். இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்குபெறுவது பற்றி கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற வீரர்கள் உட்பட அனைத்து வீரர்களும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்க கொள்கை முடிவு எடுக்கப்படும். இந்தியாவில் உள்ள மைதானங்களை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக பக்கம் வர வாய்ப்பில்ல ராஜா… ஹெச்.ராஜாவுக்கு சீமான் நச் பதில்

1998- ஆம் ஆண்டுக்கு பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ