Homeசெய்திகள்இந்தியாவாகன சோதனையில் நடந்த விபரீதம்! லாரி மோதி ஆர்டிஓ, காவலர் பலி

வாகன சோதனையில் நடந்த விபரீதம்! லாரி மோதி ஆர்டிஓ, காவலர் பலி

-

வாகன சோதனையில் நடந்த விபரீதம்! லாரி மோதி ஆர்டிஓ, காவலர் பலி

ஆந்திர மாநிலம் கடப்பாவில் அதிவேகமாக வந்த லாரி கட்டுபாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டுருந்த மற்றொரு லாரி மீது மோதியதில் சாலையோரம் வாகன சோதனையில் ஈடுப்பட்டுருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் காவலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Accident

ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் இஸ்கான் சந்திப்பு அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் சிவபிரசாத், அவரிடம் பணி புரியும் காவலர் சிவபிரசாத் இணைந்து வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது அதிவேகமாக வந்த லாரி கட்டுபாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டுருந்த லாரி மீது மோதியது. இதில் சாலையோரம் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் மீது மோதியடி அருகில் இருந்த மரத்தில் லாரி மோதி நின்றது.

விபத்து
இந்த விபத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவபிரசாத் மற்றும் காவலர் கேசவா அதே இடத்தில் உயிரிழந்தனர். இறந்தவர்கள் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக கடப்பா ரிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ