Homeசெய்திகள்தமிழ்நாடு"மின்மாற்றிக் கொள்முதலில் முறைகேடுகள் இல்லை"- தமிழக அரசு விளக்கம்!

“மின்மாற்றிக் கொள்முதலில் முறைகேடுகள் இல்லை”- தமிழக அரசு விளக்கம்!

-

 

மின்மாற்றிகள் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறப்படும் புகார்களில் உண்மை இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இராமேஸ்வரம் மீனவர்கள் கைது- அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தமிழக மின்வாரியத்திற்கான மின்மாற்றிகளைக் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டைத் தெரிவித்திருந்தது. இந்த குற்றச்சாட்டை செய்திக் குறிப்பு மூலம் தமிழக அரசு மறுத்துள்ளது. அதில், மின்மாற்றித் தயாரிக்கும் நிறுவனங்கள், ஒரே மாதிரி விலைப்புள்ளியைக் குறிப்பிடுவது, 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் நடைமுறைதான்.

அலுமினிய மின்சுருளைக் கொண்ட மின்மாற்றிகளையும், தாமிர மின்சுருளைக் கொண்ட மின்மாற்றிகளையும் ஒப்பீடு செய்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ள அரசு, இருவகை மின்மாற்றிகளின் விலையும் மாறுபட்டது என்பதோடு தரமும், ஆயுட்காலமும் வெவ்வேறானது என்பதால் ஒப்பீடே தவறானது.

தமிழகம் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகள் தரமானவை என்பதால், அதை மற்ற மாநிலங்கள் வாங்கும் மின்மாற்றிகளின் விலையோடு ஒப்பிட முடியாது. அனைத்து நிறுவனங்களும் ஒரே விலை புள்ளியை சமர்ப்பித்தாலும், அவை குறிப்பிட்டதை விட தோராயமாக 50,000 ரூபாய் வரை குறைத்தே மின்மாற்றிகள் வாங்கப்பட்டுள்ளன.

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் படிவம் வெளியீடு- விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் குறித்த விரிவான தகவல்!

தி.மு.க. அரசு எந்த நிலையிலும், முறைகேடுகளை அனுமதிக்காது; மின்மாற்றிக் கொள்முதலில் எந்த நிலையிலும் முறைகேடுகளும் நடைபெறவில்லை. இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ