டெல்லியில் இன்று (ஜூலை 10) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதித்துறை, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசு சந்தித்துப் பேசினார்.
தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சந்திப்பின் போது, தமிழகத்திற்கு மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ள நிதியை உடனடியாக விடுவிக்கவும், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை விடுவிக்கவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயசந்திரன் இ.ஆ.ப., தமிழ்நாடு இல்லம் முதன்மை உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி இ.ஆ.ப., மற்றும் துணைச் செயலாளர் பிரதிக் தயாள் ஆகியோர் உடனிருந்தனர்.
ஜூலை 14- ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்!
தமிழக நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன் முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.