Homeசெய்திகள்சினிமாடோவினோ தாமஸ் நடிக்கும் புதிய படம்..... பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்!

டோவினோ தாமஸ் நடிக்கும் புதிய படம்….. பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்!

-

மலையாளத் திரை உலகில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான டோவினோ தாமஸ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த மே 5ஆம் தேதி வெளியான 2018 திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது இப்படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெய்த பெரும் மலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இன்றளவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தற்போது டோவினோ தாமஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

நடிகர் திலகம்‘ என்று பெயரிடப்பட்டுள்ள இப்போதைய படத்தில் டோவினோ தாமஸ், பாவனா, சௌபின் சாகிர் மற்றும் பலர் நடிக்க உள்ளனர். இப்படத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான டிரைவிங் லைசன்ஸ் படத்தை இயக்கிய லால் ஜே ஆர் இயக்குகிறார்.

யாக்சன் கேரி, மேகா நாயர் இணைந்து இதற்கு இசை அமைக்கிறார்கள். மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. மேலும் இந்த படத்தை விரைவில் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு வெளியாகும் என பட குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ