Homeசெய்திகள்தமிழ்நாடு"தீபா, தீபக், ஜெயலலிதாவின் சொத்துக்களை உரிமைக் கோர முடியாது"- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

“தீபா, தீபக், ஜெயலலிதாவின் சொத்துக்களை உரிமைக் கோர முடியாது”- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

-

 

admk

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுக்கு உரிமைக்கோரி, தீபக், தீபா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்- பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த திரிணாமூல் காங்கிரஸ்!

சொத்துக் குவிப்பு வழக்கில், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விரைவில் ஏலம் விடக்கோரி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதாவின் சொத்துக்களை உடனடியாக ஏலம் விட உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடும் பணி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மூலமாக வேகம் எடுத்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபக், தீபா ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 பேர் பார்வையிழந்த கொடுமை

இந்த மனு இன்று (ஜூலை 12) பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புக் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சொத்துக்களை வாரிசுகளுக்கு வழங்க இயலாது” என்று வாதிட்டார்.

இதனையேற்ற நீதிபதி மோகன், “சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டச் சொத்துக்களை வாரிசுத்தாரர்கள் உரிமைக் கோர முடியாது” என்று தீர்ப்பளித்த நீதிபதி, தீபா, தீபக் ஆகியோரின் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

MUST READ