Homeசெய்திகள்சென்னைசென்னையில் தக்காளி விலை குறைந்தது

சென்னையில் தக்காளி விலை குறைந்தது

-

சென்னையில் தக்காளி விலை குறைந்தது

சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்து 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தக்காளி விலை உயர்வு... பொதுமக்கள் கவலை!
File Photo

கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. வட மாநிலங்களில் கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக இந்த விலை ஏற்றம் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் தக்காளி நேற்றைய விலையான 130 ரூபாயில் இருந்து இருபது ரூபாய் குறைந்து கிலோ ரூ.110-க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.

இன்று ஒரே நாளில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு

கோயம்பேட்டில் சில்லறை விலையில் தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மாநகரத்தில் சில்லரையில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போல் கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்த சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து உள்ளதால் கோயம்பேடு மொத்த விற்பனையில் நேற்று கிலோ ரூ.200 விற்பனை செய்யப்பட்டது. இன்று கிலோ 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போல் பச்சை மிளகாய் கிலோ ரூ.50 விற்கப்படுகிறது. மேலும் இஞ்சி ஒரு கிலோ ரூ.260 விற்கப்படுகிறது. பீன்ஸ் ஒரு கிலோ ரூ.90 விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

MUST READ