Homeசெய்திகள்தமிழ்நாடு"முதலமைச்சர் பங்கேற்றால் கறுப்புக் கொடி காட்டுவோம்"- அண்ணாமலை பேட்டி!

“முதலமைச்சர் பங்கேற்றால் கறுப்புக் கொடி காட்டுவோம்”- அண்ணாமலை பேட்டி!

-

 

"முதலமைச்சர் பங்கேற்றால் கறுப்புக் கொடி காட்டுவோம்"- அண்ணாமலை பேட்டி!
Video Crop Image

வரும் ஜூலை 28- ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வின் நடைப்பயணத்தைத் தொடங்கி வைக்கிறார் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகத்திற்கு கர்நாடகா அரசு காவிரி நீர் விட மறுத்து வருவதால், பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கக் கூடாது எனவும், அவ்வாறு அவர் பங்கேற்றால் தமிழகத்தில் கறுப்புக் கொடி ஏந்தி பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்படும். நாடாளுமன்றத் தேர்தலில் 400- க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் ஜூலை 28- ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடைப்பயணம் தொடங்கவுள்ளேன்.

காமராஜர் பிறந்தநாளில் உதயமாகும் தளபதி விஜய் பயிலகங்கள்!

என் மண்; என் மக்கள் பெயரில் நடைப்பயணம் தொடங்கவுள்ளேன். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கவுள்ளார். 234 தொகுதிகளில் 168 நாட்கள் நடைப்பயணம் நடைபெறும். மீண்டும் மீண்டும் நரேந்திர மோடி- 2024 என்ற முழக்கத்துடன் நடைப்பயணம் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ