Homeசெய்திகள்தமிழ்நாடுபுதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் விண்ணில் பாயத் தயாரான சந்திரயான்- 3 விண்கலம்!

புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் விண்ணில் பாயத் தயாரான சந்திரயான்- 3 விண்கலம்!

-

 

"சந்திராயன்- 3 விண்கலம் ஜூலை 13- ல் விண்ணில் ஏவப்படும்"- இஸ்ரோ அறிவிப்பு!
Photo: ISRO

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்- 3 விண்கலம் LVM MK 3 ராக்கெட் மூலம் இன்று (ஜூலை 14) மதியம் 02.35 மணியளவில் விண்ணில் ஏவப்படவுள்ளது. நிலவு குறித்து ஆய்வுச் செய்வதற்காக சந்திரயான்- 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 25.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று (ஜூலை 13) மதியம் 01.00 மணிக்கு தொடங்கியது.

“முதலமைச்சர் பங்கேற்றால் கறுப்புக் கொடி காட்டுவோம்”- அண்ணாமலை பேட்டி!

சந்திரயான்- 2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்ப்பிட்டர் தற்போதும் நிலவை தான் சுற்றி வருகிறது. இந்த நிலையில், சந்திரயான்- 3 திட்டத்தில் ரோவர் மற்றும் லேண்டர் மட்டும் அனுப்பப்பட உள்ளதாக தகவல் கூறுகின்றன. நிலவைச் சுற்றி வரும் ஆர்ப்பிட்டர், சந்திரயான்- 3 உடன் இணைந்து தனது ஆய்வுப் பணியைத் தொடங்கும்.

சந்திரயான்- 3ல் லேண்டர் சற்றுப் பெரியதாக 4 இன்ஜின்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. சந்திரயான்- 3ல் தொலைத்தொடர்பு இயக்கத்திற்கு தேவையான சென்சார் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதில், கூடுதலாக ஒரு ஆண்டனா இணைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லேண்டர், ரோவரின் செயல்பாடுகள் மற்றும் இயக்கம் அமையும்.

“திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்றுச் செல்லும்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

லேண்டர், ரோவர் ஆகியவைகளில் தனித்தனியே தொலைத்தொடர்பு சாதனங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நொடிக்கும் நொடி புதிய தகவல்களைப் பெறமுடியும் என்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

MUST READ