ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்- 3 விண்கலம் LVM MK 3 ராக்கெட் மூலம் இன்று (ஜூலை 14) மதியம் 02.35 மணியளவில் விண்ணில் ஏவப்படவுள்ளது. நிலவு குறித்து ஆய்வுச் செய்வதற்காக சந்திரயான்- 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 25.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று (ஜூலை 13) மதியம் 01.00 மணிக்கு தொடங்கியது.
“பொது சிவில் சட்டம் கடும் அச்சுறுத்தலை முன் வைக்கிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
சந்திரயான்- 3 விண்கலத்தில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெறுகிறது சந்திரயான்- 3. இந்த திட்டம் வெற்றி பெற்றால் நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடாக இந்தியா இருக்கும். ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் இதுவரை நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கியுள்ளன. லேண்டர், ரோவர் உள்ளிட்டவையுடன் சந்திரயான்- 3 நிலவின் தரைப்பரப்பை ஆய்வு செய்யும்.
ஆகஸ்ட் 23, 24- ஆம் தேதி நிலவில் லேண்டர் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 749.86 கிலோ எடைக்கொண்ட நிலவில் திரையிறங்கிய பின் 14 நாட்கள் செயல்படும். 26 கிலோ எடைக் கொண்ட ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கிய பின் 14 நாட்கள் செயல்படும். மிகத் துல்லியமாக, இலகுவாகத் தரையிறங்கும் வகையில், இந்த முறை லேண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3,900 கிலோ எடைக்கொண்ட சந்திரயான்- 3 விண்கலத்தில் 7 விதமான கருவிகள் உள்ளன. சந்திரயான்- 3 விண்கலம் திட்டத்திற்கான மொத்த பட்ஜெட் 615 கோடி ரூபாய் ஆகும். பூமியில் இருந்து 3.84 லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ள நிலவை நோக்கிப் பயணிக்கிறது ‘சந்திரயான்-3’ என்பது குறிப்பிடத்தக்கது.