spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்று முதல் மலிவு விலையில் அமுதம் அங்காடிகளில் தக்காளி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு

இன்று முதல் மலிவு விலையில் அமுதம் அங்காடிகளில் தக்காளி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு

-

- Advertisement -
kadalkanni

இன்று முதல் மலிவு விலையில் அமுதம் அங்காடிகளில் தக்காளி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு

சென்னையில் உள்ள 14 அமுதம் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில் இன்று முதல் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் தக்காளி ஆகியவை கொள்முதல் விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Image

வரத்து குறைவு மற்றும் தொடர்மழை காரணமாக தக்காளியின் விலை தமிழ்நாட்டில் உச்சத்தை பெற்றுள்ளது. இதன் காரணமாக தக்காளியின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு பசுமை பண்ணை கடைகள் மற்றும் நியாய விலைக் கடைகள் மூலம் தற்காலியை கொள்முதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறது. அதேசமயம் தக்காளியின் விலைக்கு ஏற்ப துவரம் பருப்பு விலையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் இறுதியில் 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு ஜூலை மாதம் முதல் வாரத்தில் 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மளிகை பொருட்கள் விலையும் உச்சத்தைப் பெற்றுள்ள நிலையில் சாமானியர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

amutham

இந்நிலையில் தமிழ்நாடு அரசு உணவுத்துறை சார்பில் இன்று முதல் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவை கொள்முதல் விலைக்கு விற்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. அத்துடன் பொதுமக்களின் நலன் கருதி தக்காளியும் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், துவரம் பருப்பு 500 கிராம் 75 ரூபாய்க்கும், உளுத்தம் பருப்பு 500 கிராம் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இன்று விற்பனை தொடங்கியுள்ளது. வெளி சந்தையில் விலை அதிகமாக இருந்து வரக்கூடிய நிலையில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது என்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை சுமையை குறைக்க இது பயனுள்ளதாக இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

MUST READ