நடிகர் விஷால் இயக்குனர் ஹரி உடன் கூட்டணி அமைக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.
நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் சுனில்,எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், ரித்து வர்மா, ஒய் ஜி மகேந்திரன், அபிநயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்தப் படத்தை அடுத்து விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ மற்றும் ஜி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்க உள்ளது.
தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களை அடுத்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளன. மேலும் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. முதல் 3 நாட்கள் அட்டவணையில் போட்டோஷூட் மற்றும் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அதையடுத்து ஆகஸ்ட் 7 தேதி முதல் முழு வீச்சில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.