மதுரை மாவட்டம், நத்தம் சாலையில் ரூபாய் 215 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15) மாலை 04.00 மணிக்கு திறந்து வைக்கிறார். கலைஞர் நூலகத்தின் திறப்பு விழாவிற்காக இன்று காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மதுரைக்கு செல்கிறார்.
லியோ ஷூட்டிங்கிற்கு ஃபுல் ஸ்டாப்….. லோகேஷ் கனகராஜின் ஸ்வீட் ட்வீட்!
திறக்கப்படவுள்ள கலைஞர் நூலகத்தில் ரூபாய் 60 கோடி மதிப்பிலான புத்தகங்களும், ரூபாய் 18 கோடிக்கு தளவாடப் பொருட்களும் உள்ளன. மதுரை கலைஞர் நூலகம் மூலம் தென்மாவட்ட மாணவர்கள், ஆய்வாளர்கள், போட்டித் தேர்வர்கள் பெரிதும் பயனடைவர்.
‘ஈரம்’ படத்தின் கூட்டணியில் உருவாகும் ‘சப்தம்’……. டப்பிங்கை தொடங்கிய ஆதி!
இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி, மதுரை மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நத்தம் சாலை- ரவுண்டானா சந்திப்பு- ஆத்திகுளம் சந்திப்பு வரை வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கப்பலூர் சந்திப்பில் இருந்து மதுரை நகர் நோக்கி வரும் கனரக வாகனங்கள் செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை, தூத்துக்குடியில் இருந்து அனைத்து வாகனங்களும் செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.