Homeசெய்திகள்விளையாட்டுமுதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அபார வெற்றி!

முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அபார வெற்றி!

-

 

முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அபார வெற்றி!
Photo: BCCI

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மதுரையில் இன்று கலைஞர் நூலகம் திறப்பு!

மேற்கிந்தியத் தீவுகளில் டொமினிகாவில் உள்ள விண்ட்சர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஷ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சதமடித்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

லியோ ஷூட்டிங்கிற்கு ஃபுல் ஸ்டாப்….. லோகேஷ் கனகராஜின் ஸ்வீட் ட்வீட்!

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி அஸ்வின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிக்கொடுத்தது. இதனால் 130 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 7விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியை இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.

MUST READ