Homeசெய்திகள்சினிமாஆக்சன் திரில்லரில் விஷால், ஹரி கூட்டணி..... படப்பிடிப்பு ஆரம்பம்!

ஆக்சன் திரில்லரில் விஷால், ஹரி கூட்டணி….. படப்பிடிப்பு ஆரம்பம்!

-

நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மாசான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் விஷால் 34 ஆவது படத்தை இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார். ஹரி விஷால் கூட்டணி ஏற்கனவே தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்றாவது முறையாக ‘VISHAL 34’ படத்தில் இணைந்துள்ளது.

இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார்.
ஆறு, சிங்கம், சிங்கம் 2, வேங்கை, சாமி 2 உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஹரி மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. பிரியா பவானி சங்கர் ஹரியுடன் ஏற்கனவே யானை படத்தில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் பூஜை ஆனது கடந்த ஏப்ரல் மாதமே துவங்கப்பட்டது. ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ