Homeசெய்திகள்சினிமாசன்னி லியோன் ரசிகர்களை சண்டைக்கு இழுத்த ரோஜா… என்ன காரணம் தெரியுமா?

சன்னி லியோன் ரசிகர்களை சண்டைக்கு இழுத்த ரோஜா… என்ன காரணம் தெரியுமா?

-

- Advertisement -
kadalkanni

நடிகை ரோஜா தற்போது ஆந்திர அரசியலில் முக்கியப் புள்ளியாக மாறியுள்ளார். அங்கு தற்போது அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் ரோஜா சமீபத்தில் பேசும் போது பவன் கல்யாணை முன்னாள் ஆபாச பட நடிகையான சன்னி லியோனுடன் ஒப்பிட்டு பேசினார்.

பவன் பேசும் உண்மைகள் சன்னி லியோன் வேதம் ஓதுவது போல் உள்ளது என ரோஜா கூறினார். இந்த விஷயம் பேசுபொருளாக மாறியது. சமூக வலைத்தளங்களில் வைரலானது. பின்னர் இது குறித்து சன்னி லியோன் பதில் அளித்ததாக பல செய்திகள் வெளியாகின.

உண்மையில், சன்னி லியோனின் பெயரில் செயல்பட்டு வரும் ஒரு பகடி கணக்கு தான் அந்த பதிலை அளித்துள்ளனர். ஆனால் சன்னி லியோன் பதில் அளித்ததாக அதை சில ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.

“நான் ஒரு ஆபாச நடிகையாக இருந்தேன். எனது கடந்த காலத்தைப் பற்றி எந்த வருத்தமும் இல்லை. உங்களைப் போல் அல்லாமல் நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதை வெளிப்படையாகவே செய்தேன். உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், நான் அதை விட்டுவிட்டேன், ஆனால் நீங்கள் இன்னும் விடவில்லை.” என்று அந்தக் கணக்கிலிருந்து ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

இதை சன்னி லியோன் அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து வந்த செய்தியாக ஒரு முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதனால் சமூக வலைத்தளங்களில் ரோஜாவை பலரும் விளாசினர். இந்நிலையில் தவறுதலாக செய்தி வெளியிட்ட அந்த ஊடகங்கள் மீது ரோஜா வழக்கு தொடுத்துள்ளார். அதையடுத்து அந்த ஊடகத்தின் ஆசிரியர் குழு மன்னிப்பு கேட்டது. ஆனால், முதலில் இதுபோன்ற ‘மலிவான கருத்துக்களை’ கூறியதற்காக சன்னியிடம் மன்னிப்பு கேட்க வேண்டியது ரோஜாதான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ