தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் நடிப்பில் லியோ திரைப்படத்தை இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி உள்ள இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ உள்ளிட்ட படங்களில் கதாசிரியராக பணிபுரிந்த ரத்தினகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நியூ பிகினிங் (New beginnings) என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் லோகேஷ் கனகராஜ், ரத்தினகுமாரும் தனது அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார்கள் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன. மேலும் இது தொடர்பாக ரஜினிகாந்திடம் லோகேஷ் கனகராஜ் கதை கூறியிருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.அது மட்டும் இல்லாமல் இதனை இயக்குனர் மிஷ்கின், உண்மைதான் என்று பேட்டி ஒன்றில் உறுதி செய்திருந்தார்.
ஆதலால் லோகேஷ் கனகராஜும் ரத்தினகுமாரும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்காக தற்போது இணைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரத்தினகுமார், மேயாத மான், ஆடை, குலு குலு உள்ளிட்ட படங்களின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.