ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், 4,863 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
திருமுல்லைவாயில் மாற்றுத்திறனாளியை கரம்பிடித்த பிலிப்பைன்ஸ் மணமகள்
இது ஆண்டின், இதே காலாண்டில் கிடைத்த லாபத்தை விட 12% அதிகம் என பங்குச்சந்தையிடம் சமர்ப்பித்த அறிக்கையில், ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட மொபைல் ஃபோன் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஜியோ நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் ஏர்டெல் நிறுவனமும், வோடாஃபோன் நிறுவனமும், கடைசி இடத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமும் உள்ளது.
பால்கனியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
குறிப்பாக, ஜியோவின் விலையைக் காட்டிலும் மற்ற நிறுவனங்களின் டாரிஃப் விலை அதிகமாக இருப்பதாலும், தடையில்லா இணைய சேவை, இணையத்தின் வேகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் ஜியோவைப் பயன்படுத்துகின்றனர்.