வரும் ஆகஸ்ட் 6- ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சென்னைக்கு வருகிறார்.
ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு! அதிர்ச்சி தகவல்
ஆகஸ்ட் 6- ஆம் தேதி அன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை சர்வதேச விமானத்திற்கு வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, அன்றைய தினம் காலை 11.00 மணிக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 165வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும், சுமார் 1,000- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சிறப்புரையாற்றவிருக்கிறார்.
கர்நாடகாவில் கொட்டும் மழை- பள்ளிகளுக்கு விடுமுறை
குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்ற பிறகு, முதன் முறையாக சென்னைக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.