குமரி வேலம்மாள் பாட்டி உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்
கன்னியாகுமரியை சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனா பேரிடர் நிவாரணத்தொகை பெற்றபோது, தனது புன்னகை மூலம் இணைய உலகை ஈர்த்தவர் கன்னியாகுமரி மாவட்டம் கீழகலுங்கடிப் பகுதியை சேர்ந்த வேலம்மாள் பாட்டி. அவருக்கு திமுக அரசு சார்பில் வீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில் வேலம்மாள் பாட்டி வயது முதிர்வால் இன்று காலை உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் செய்தியறிந்து வருத்தமுற்றேன். கொரோனா பேரிடர் கால நிவாரணமாகக் கழக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்ற போது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.